/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் கிணறுக்கு மின் இணைப்பு இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு
/
குடிநீர் கிணறுக்கு மின் இணைப்பு இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு
குடிநீர் கிணறுக்கு மின் இணைப்பு இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு
குடிநீர் கிணறுக்கு மின் இணைப்பு இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு
ADDED : ஏப் 05, 2025 10:10 PM
நெரும்பூர்:திருக்கழுக்குன்றம் அடுத்த, கிளாப்பாக்கம் ஊராட்சி, பெரியகாலனி ஆதிதிராவிடர் பகுதியில் குடிநீர் தரமின்றியும், பற்றாக்குறையாகவும் உள்ளது.
அப்பகுதியினருக்கு குடிநீர் வழங்க திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி நிர்வாகம், அப்பகுதி ஒட்டியுள்ள பாண்டூர் ஊராட்சி பாலாற்றுப் படுகையில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆழ்துளை கிணறு அமைக்க ஏற்பாடு செய்தது.
பாண்டூர் தி.மு.க., கிளை செயலர் கிருஷ்ணசாமி மற்றும் கிளாப்பாக்கம் ஊராட்சித் தலைவர், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராசுக்குட்டி இடையே, உள்ளாட்சித் தேர்தல் பகை இருப்பதால் பாண்டூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடும்பத்தினர், கிளாப்பாக்கத்திற்கு, குடிநீர் வழங்குவதை எதிர்த்து, கிணறு அமைக்க விடாமல் தடுத்தனர்.
இதையடுத்து, ஊராட்சி தலைவர் ராசுக்குட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, திட்டத்தை செயல்படுத்த உத்தரவு பெற்றார்.
நீதிமன்ற உத்தரவை, வருவாய், வட்டார வளர்ச்சி நிர்வாகம் நிறைவேற்ற முயன்றும், பாண்டூர் பகுதியினர் மீண்டும் தடுத்தனர்.
இறுதியாக, கடந்த ஆண்டு டிச., 18ம் தேதி பாண்டூரில் குடிநீர் கிணறு அமைக்கப்பட்டது. கிளாப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம், கிணற்று பகுதியில் இருந்து, கிளாப்பாக்கம் வரை, நிலத்தடியில் குழாய் அமைத்து கிணற்று பகுதியில், மின்சார அறை அமைத்தது.
மின் இணைப்பிற்காக விண்ணப்பித்து, மின் கம்பங்கள் நடப்பட்டன. ஆனால், மின் வாரியத்தினர், மின் இணைப்பு வழங்காமல் பல மாதங்களாக இழுத்தடிப்பதாக, கிளாப்பாக்கம் பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். கோடைகாலத்தில் குடிநீர் அவசியம் கருதி, மின் இணைப்பை விரைந்து வழங்க, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.