/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாதித்த அரசு பள்ளி மாணவர்கள் கலெக்டரை சந்தித்து வாழ்த்து
/
சாதித்த அரசு பள்ளி மாணவர்கள் கலெக்டரை சந்தித்து வாழ்த்து
சாதித்த அரசு பள்ளி மாணவர்கள் கலெக்டரை சந்தித்து வாழ்த்து
சாதித்த அரசு பள்ளி மாணவர்கள் கலெக்டரை சந்தித்து வாழ்த்து
ADDED : பிப் 13, 2024 04:28 AM

செங்கல்பட்டு, : செங்கல்பட்டு மாவட்ட கல்வித்துறை சார்பில், மஹாராஷ்டிரா மாநிலம், சந்திராபூரில், 67வது தேசிய அளவிலான தடகள போட்டிகள், கடந்த ஆண்டு டிச., 12 முதல் 31ம் தேதி வரை நடந்தன.
அதில், பல்லாவரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி புஷ்பா வட்டு எறிதலிலும், ராஜலட்சுமி ஈட்டி எறிதலிலும் மாநில அளவில் முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் பெற்றனர்.
இதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் அரவிந்த், குத்துச்சண்டை போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார்.
மேலும், மாணவி பார்திமா நோஹா என்பவர், சட்டப்படிப்பிற்கான பொது நுழைவு தேர்வில், மாவட்ட அளவில் முதல் இடம் பெற்று, திருச்சி சட்டக்கல்லுாரியில் படிக்க இடம் பெற்றார்.
கோவளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முசாமில், ஆகாஷ் ஆகியோர், தென்னிந்திய அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில், மாற்றுத்திறனாளிகள் ரயில் பாதையை கடப்பதற்கான நவீன மேம்பாலம் கண்டுபிடித்து சாதனை படைத்தனர்.
இந்த சாதனை மாணவ - மாணவியர், நேற்று கலெக்டர் அருண்ராஜை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.