/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கம் ரயில்வே மேம்பாலம் ஜனவரியில் பயன்பாட்டிற்கு திறப்பு?
/
அச்சிறுபாக்கம் ரயில்வே மேம்பாலம் ஜனவரியில் பயன்பாட்டிற்கு திறப்பு?
அச்சிறுபாக்கம் ரயில்வே மேம்பாலம் ஜனவரியில் பயன்பாட்டிற்கு திறப்பு?
அச்சிறுபாக்கம் ரயில்வே மேம்பாலம் ஜனவரியில் பயன்பாட்டிற்கு திறப்பு?
ADDED : ஏப் 30, 2025 06:30 PM
செங்கல்பட்டு:'அச்சிறுபாக்கம் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து, வரும் ஜனவரியில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்' என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தில், ரயில்வே கடவுப்பாதை உள்ளது.
இந்த கடவுப்பாதையைத் தாண்டி ராவுத்தநல்லுார், வெங்கடேசபுரம், பருக்கல், தண்டலம், பெரியகளக்கடி, பெருக்கரணை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர்.
ரயில் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், அடிக்கடி இந்த கடவுப்பாதை மூடப்படுகிறது.
இதனால், சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மேம்பாலம் அமைக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளிடம் நீண்டகாலமாக சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன் பின், ரயில்வே துறையினர் கடவுப்பாதையில் கடக்கும் வாகனங்களை கணக்கெடுப்பு நடத்தினர். இந்த கணக்கெடுப்பில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடப்பதை உறுதிப்படுத்தினர்.
இதனால், ரயில்வே மேம்பாலம் கட்டலாம் என, உயரதிகாரிகளிடம், ரயில்வே துறையினர் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதைத்தொடர்ந்து, மேல்மருவத்துார் - அச்சிறுபாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, அச்சிறுபாக்கத்தில் மேம்பாலம் அமைக்க 2011-12ம் ஆண்டு, 32.3 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.
இந்த பாலம் 730 மீட்டர் நீளம், 28 அடி அகலத்தில் அமைகிறது.
ரயில்வே துறையினர், 2012 ம் ஆண்டு, தண்டவாள பகுதியில் மேம்பாலப் பணியை, ரயில்வே நிர்வாகம் முடித்தது. அதன் பின், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பகுதியில், தனியார் நிலங்கள் இருந்ததால், கையகப்படுத்தும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.
இதில், நில உரிமையாளர்கள் ஆவணங்கள் பெறுவதில் காலதாமதம், நீதிமன்றங்களில் வழக்கு நிலுவை என பிரச்னை இருந்தது.
இந்த பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட்ட பிறகு, நில உரிமையாளர்கள் உரிய ஆவணங்கள் கொடுத்தனர்.
அதன் பின், நிலம் கையகப்படுத்தும் பணியை முடித்து, நெடுஞ்சாலைத் துறையினரிடம், வருவாய்த் துறையினர் ஒப்படைத்தனர்.
அதன் பின், மேம்பாலம் அமைக்க கடந்தாண்டு, பிப்ரவரியில் 'டெண்டர்' விடப்பட்டது.
இந்த பணிக்கான டெண்டர், செங்கல்பட்டு வெங்கடேஸ்வரா ரோடு கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்திற்கு, கடந்த ஜூன் மாதம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மேம்பாலப் பணிகளை துவக்கப்பட்டு, தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மேம்பால பணிகள் முடிந்து, வரும் ஜனவரி மாதத்திற்குள், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.