/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கம் துணைமின் நிலைய மின்மாற்றி வெடித்து தீ விபத்து
/
அச்சிறுபாக்கம் துணைமின் நிலைய மின்மாற்றி வெடித்து தீ விபத்து
அச்சிறுபாக்கம் துணைமின் நிலைய மின்மாற்றி வெடித்து தீ விபத்து
அச்சிறுபாக்கம் துணைமின் நிலைய மின்மாற்றி வெடித்து தீ விபத்து
ADDED : செப் 13, 2025 01:22 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் துணை மின் நிலைய மின்மாற்றி வெடித்து, தீ விபத்து ஏற்பட்டது.
அச்சிறுபாக்கத்தில் இருந்து எலப்பாக்கம் செல்லும் வழியில், பள்ளிப்பேட்டை பகுதியில், அச்சிறுபாக்கம் 110 கே.வி., துணைமின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து அச்சிறுபாக்கம், ராமாபுரம், ஒரத்தி, பொலம்பாக்கம், நுகம்பல் உள்ளிட்ட துணை மின் நிலையங்களுக்கு, மின்சாரம் வினியாகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை 9:00 மணியளவில், அச்சிறுபாக்கம் 110 கே.வி., துணைமின் நிலையத்தில் உள்ள மின்மாற்றி, திடீரென வெடித்து, தீப்பற்றி எரியத் துவங்கியது.
இதனால், உடனடியாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டு, அச்சிறுபாக்கம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின் வாரியத் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்மாற்றி அதிக வெப்பத்துடன் தீப்பற்றி எரிந்ததால், தீயை அணைப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டது. பின், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்மாற்றி தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து, விசாரணை நடக்கிறது.