/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அத்தியாவசிய பொருட்களை பதுக்குவோர் மீது நடவடிக்கை
/
அத்தியாவசிய பொருட்களை பதுக்குவோர் மீது நடவடிக்கை
ADDED : அக் 15, 2024 07:53 PM
செங்கல்பட்டு:அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
இந்திய வானிலை ஆய்வுத்துறை வாயிலாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் துவங்கி, வரும் 17ம் தேதி வரை, கன மற்றும் மிக கனமழை பெய்ய உள்ளதாக, முன்னெச்சரிக்கை அறிக்கை வரப்பெற்றுள்ளது.
இதனால், மழைக்காலங்களில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பால், உணவு பொருட்களை சரியான விலையில் விற்பனை செய்ய வேண்டும்.
மழை காலங்களில் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கிவைப்பது, விலை உயர்த்தி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டோர் மீது, பேரிடர் மேலாண்மை சட்டம் - 2005ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.