/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
5,070 கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிரடி
/
5,070 கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிரடி
5,070 கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிரடி
5,070 கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிரடி
ADDED : ஜூலை 09, 2025 02:15 AM

செங்கல்பட்டு:சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலைக்கு அருகில் இருந்த, 5,070 கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிப் பகுதிகளில் உள்ள இடங்களை ஆக்கிரமித்து தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், நுாறு அடிக்கும் உயரமான கொடிக் கம்பங்களை அமைத்தனர்.
இந்த கொடிக்கம்பங்கள், சாலையின் அருகில், விபத்து ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தன.
பலத்த காற்று வீசினால், இந்த கொடிக்கம்பங்கள் முறிந்து, சாலையில் விழும் அபாயம் நிலவியது. இதுமட்டுமின்றி, தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து, கொடிக்கம்பங்கள் மீது மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனால் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள்மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள இதுபோன்ற கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டுமென, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழக அரசு ஆகியோரிடம், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதற்கிடையில், தமிழகம் முழுதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, நம் நாளிதழிலும் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி மற்றும் தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து, கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா உத்தரவிட்டார்.
இதன் பின், கடந்த ஒரு மாதத்தில் செங்கல்பட்டு தாலுகாவில் 579, திருக்கழுக்குன்றம் தாலுகாவில் 551, திருப்போரூர் தாலுகாவில் 554, மதுராந்தகம் தாலுகாவில், 943, செய்யூர் தாலுகாவில், 688, தாம்பரம் தாலுகாவில் 815, பல்லாவரம் தாலுகாவில் 508, வண்டலுார் தாலுகாவில் 432 என, மொத்தம் 5,070 எண்ணிக்கையில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த கொடிக்கம்பங்களை, அதிகாரிகள் அகற்றினர்.
இதனால் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பல இடங்களில், கட்சி கொடிக் கம்பங்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.