/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதர் சூழ்ந்த மழைநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை அவசியம்
/
புதர் சூழ்ந்த மழைநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை அவசியம்
புதர் சூழ்ந்த மழைநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை அவசியம்
புதர் சூழ்ந்த மழைநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை அவசியம்
ADDED : நவ 25, 2024 01:50 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, புதுப்பட்டு ஊராட்சி உள்ளது. சாத்தமை, பில்லாஞ்சிகுப்பம், பசும்பூர், குன்னவாக்கம் உள்ளிட்ட குக்கிரமங்கள் இந்த ஊராட்சியின் கீழ் உள்ளன.
இதில், மதுராந்தகத்திலிருந்து நெல்வாய் வழியாக, உத்திரமேரூர் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து பிரிந்து, புதுப்பட்டு கிராமப் பகுதிக்கு செல்லும் தார் சாலை உள்ளது.
சாலையோரம், மழை நீர் விரைந்து வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டது. அக்கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து, புதர்கள் நிறைந்து உள்ளன.
மேலும், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், மரத்துண்டுகள், பிளாஸ்டிக் குப்பை போன்றவை கால்வாயில் நிறைந்துள்ளன. கால்வாய் வழியாக செல்லும் மழை நீர், சித்தேரிக்கு சென்றடைகிறது.
எனவே, கால்வாயை சீரமைத்து, மழைநீர் விரைந்து வெளியேறும் வகையில், ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.