/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நாற்றங்கால் பண்ணையில் கூடுதல் கலெக்டர் ஆய்வு
/
நாற்றங்கால் பண்ணையில் கூடுதல் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 06, 2025 01:57 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில், வனத்துறையின் மூலமாக பராமரிக்கப்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணையை, செங்கல்பட்டு கூடுதல் கலெக்டர் நாராயண சர்மா, நேற்று, ஆய்வு செய்தார்.
மழை அதிக அளவில் பெய்வதற்கு மரங்கள் பெரும் அளவு உதவி செய்கின்றன. இதனால் அனைத்து பகுதிகளிலும் மரங்களை வளர்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
தமிழ்நாடு பசுமையாக்கும் திட்டத்தின் கீழ், அச்சிறுபாக்கத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான வளாகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் தேக்கு, வேங்கை, புங்கை, பூவரசு, வேம்பு மற்றும் இலந்தை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு கூடுதல் கலெக்டர் நாராயண சர்மா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.