sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளை முடிக்க கூடுதல் கலெக்டர் உத்தரவு

/

ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளை முடிக்க கூடுதல் கலெக்டர் உத்தரவு

ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளை முடிக்க கூடுதல் கலெக்டர் உத்தரவு

ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளை முடிக்க கூடுதல் கலெக்டர் உத்தரவு


ADDED : மார் 29, 2025 07:00 PM

Google News

ADDED : மார் 29, 2025 07:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், மத்திய அரசின் திட்டமான 'ஜல் ஜீவன்' திட்டம் வாயிலாக, 9.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 39 மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளில், மத்திய அரசின் திட்டமான ஜல் ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்கி, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து ஊராட்சிகளில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல் நிலை நீர்தேக்கத் தொட்டிகள் சிதிலமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன.

இந்த தொட்டிகளை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, 2023-24ம் ஆண்டு எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், 78 மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட, 17 கோடியே 17 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, 75 மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி முடிந்துள்ளது. திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து, 2024-25ம் ஆண்டு, எட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கு, 39 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட 9 கோடியே 43 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இப்பணிகளுக்கு, நிர்வாக அனுமதி வழங்கி, கலெக்டர் அருண்ராஜ், ஊரக வளர்ச்சித் துறைக்கு உத்தரவிட்டார். அதன் பின், டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கி, 22 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. 17 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா கூறியதாவது:

செங்கல்பட்டு மாவட்டத்தில், எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், ஜல் ஜீவன் திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பணிகளை கோடை காலத்திற்குள் முடிக்க, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us