/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெரும்பாக்கம் அரசு கல்லுாரியில் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
/
பெரும்பாக்கம் அரசு கல்லுாரியில் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
பெரும்பாக்கம் அரசு கல்லுாரியில் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
பெரும்பாக்கம் அரசு கல்லுாரியில் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
ADDED : ஏப் 28, 2025 03:12 AM
சென்னை:பெரும்பாக்கம் அரசு கலை கல்லுாரி, 2016ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு, இளநிலை பிரிவில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம்; பி.எஸ்.சி., கணினி அறிவியல், கணிதம், வேதியியல், இயற்பியல்; பி.சி.ஏ., மற்றும் பி.காம்., பொது, நிறுவன மேலாண்மை ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.
முதுநிலை பிரிவில், எம்.ஏ., தமிழ், எம்.எஸ்.சி., கணினி அறிவியல், கணிதம் மற்றும் எம்.காம்., பொது ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.
மொத்தம் 1,200க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். கடந்த ஆண்டு மாணவ - மாணவியர் சேர்க்கை குறைந்தது.
அதனால், வரும் கல்வியாண்டில், 100 சதவீத சேர்க்கையை வலியுறுத்தி, நேற்று முன்தினம் பெரும்பாக்கத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இதில், கல்லுாரி, காவல் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றன.
கல்லுாரி நிர்வாகத்தினர் கூறியதாவது:
கல்லுாரியில் ஆய்வகம், நுாலகம், கலையரங்கம், கிரிக்கெட், கபடி விளையாட்டு மைதானம், விடுதி மற்றும் கல்லுாரி வரை பேருந்து வசதி உள்ளது.
விபரங்களுக்கு, கல்லுாரியில் நேரில் அணுகலாம். மேலும், 79042 50370 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.