/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
செங்கல்பட்டில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 31, 2024 01:02 AM
செங்கல்பட்டு,
அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதை கண்டித்து, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில், அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தி.மு.க., அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் முதல் தகவல் அறிக்கை எனும் 'எப்.ஐ.ஆர்.,' வெளியானதற்கு, காவல் துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து, இவர்களை கைது செய்த போலீசார், செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலை விடுவித்தனர்.
செங்கல்பட்டு போலீசார் 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.