/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்கம்பங்களில் விளம்பர தட்டிகள் புறநகர் பகுதியில் மீண்டும் அதிகரிப்பு
/
மின்கம்பங்களில் விளம்பர தட்டிகள் புறநகர் பகுதியில் மீண்டும் அதிகரிப்பு
மின்கம்பங்களில் விளம்பர தட்டிகள் புறநகர் பகுதியில் மீண்டும் அதிகரிப்பு
மின்கம்பங்களில் விளம்பர தட்டிகள் புறநகர் பகுதியில் மீண்டும் அதிகரிப்பு
ADDED : ஜன 24, 2025 01:02 AM

தாம்பரம், தாம்பரத்தில், மின் கம்பங்களில் விளம்பர தட்டிகளை கட்டி தொங்க விடுவது மீண்டும் அதிகரித்து உள்ளது. இதுபோன்ற தட்டிகளை, மாநகராட்சி அதிகாரிகள் உடனே அகற்ற வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
புறநகரில், ஜி.எஸ்.டி.,- சாலை, தாம்பரம் -- வேளச்சேரி, தாம்பரம் -- முடிச்சூர், பல்லாவரம்- - திருநீர்மலை, பல்லாவரம்- - துரைப்பாக்கம், பல்லாவரம் -- குன்றத்துார் சாலைகளை ஒட்டியுள்ள கட்டடங்களின் மேல், ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்படுகின்றன.
அதேபோல், மின் கம்பங்களில் சிறிய அளவிலான விளம்பர தட்டிகளை கட்டுவது, பேனர் வைப்பதும் தொடர்கிறது.
நீதிமன்றம் உத்தரவை அடுத்து, தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அவ்வப்போது பேனர்கள் அகற்றப்பட்டாலும், பேனர்களை தாங்கும் கம்பிகள், கட்டடங்களின் மேற்பகுதியில் அப்படியே உள்ளன. அதேபோல், பெருங்களத்துார் மேம்பாலம், சிட்லப்பாக்கம் பிரதான சாலை, தாம்பரம் காந்தி சாலை, ஜி.எஸ்.டி., சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில், மின் கம்பங்களில் சிறிய அளவிலான விளம்பர தட்டிகளை கட்டி தொங்க விடுவதும் அதிகரித்துள்ளது.
சாலையோரத்தில் உள்ள மரங்களில் விளம்பர தட்டிகளை ஆணியால் அடித்து தொங்க விடுவதும் தொடர்கிறது.
அதனால், முக்கிய சாலைகளில் விதிமுறையை மீறி தொங்க விடப்பட்டுள்ள விளம்பர தட்டிகளை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

