/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெறப்படும் வாக்காளர் படிவங்களை உடனுக்குடன் பதிவேற்ற அறிவுரை
/
பெறப்படும் வாக்காளர் படிவங்களை உடனுக்குடன் பதிவேற்ற அறிவுரை
பெறப்படும் வாக்காளர் படிவங்களை உடனுக்குடன் பதிவேற்ற அறிவுரை
பெறப்படும் வாக்காளர் படிவங்களை உடனுக்குடன் பதிவேற்ற அறிவுரை
ADDED : நவ 18, 2024 03:31 AM

செய்யூர்:செய்யூர் சட்டமன்ற தொகுதியில், 263 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அனைத்து மையங்களிலும், கடந்த இரண்டு நாட்கள், வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது.
சிறப்பு முகாம் நடந்த வாக்குச்சாவடி மையங்களில், செய்யூர் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி மைய கண்காணிப்பு அலுவலர் ஷாகிதா பர்வீன், நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
இதில், முகாமில் பெறப்படும் படிவங்களை உடனுக்குடன் பி.எல்.ஓ., செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். புதிதாக பதிவு செய்வோரின் பிறப்பு சான்றிதழை சரிபார்க்க வேண்டும்.
பெயர் நீக்கம் செய்ய வழங்கப்படும் படிவங்களை நேரில் ஆய்வு செய்து, அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
அதிகபட்சம், 10 புதிய வாக்காளர் பதிவு செய்யும் படிவங்கள் மட்டுமே, அரசியல் கட்சி வாக்குச்சாவடி முகவரிடம் இருந்து பெறப்பட வேண்டும் என, அறிவுறுத்தினார்.