/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைந்த வாடகையில் விவசாய இயந்திரங்கள்
/
குறைந்த வாடகையில் விவசாய இயந்திரங்கள்
ADDED : பிப் 11, 2025 06:50 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள், குறைந்த வாடகையில் இயந்திரங்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்தலாம் என, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் நந்தகுமார் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நவரை பருவத்தில், விவசாய நிலங்களில் நெல் சாகுபடி பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு உழவு பணிக்காக, 25 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக டிராக்டர், கல்டிவேட்டர் உள்ளிட்டவற்றை வாடகைக்கு வழங்கப்படுகின்றன.
ஒரு மணி நேரத்திற்கு டிராக்டருக்கு 1,000 ரூபாயும், மற்ற இயந்திரங்களுக்கு 950 ரூபாய் என, குறைந்த வாடகையில் விடப்படுகிறது. இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என, இணை பதிவாளர் நந்தகுமார் தெரிவித்தார்.
இயந்திரம் கிடைக்கும் இடங்கள்:
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நெடுமரம், சத்தியமங்கலம், அமிந்தங்கரணை, கடப்பாக்கம், மேலவலம்பேட்டை, ஆத்துார், முள்ளிப்பாக்கம், ஜமின்பாண்டூர், செய்யூர், புத்திரன்கோட்டை, நுகும்பல், பசும்பூர், ஆமூர், பேரம்பாக்கம், மொறப்பாக்கம், சாலுார், பெரும்பேடு, கடுகுபட்டு, வல்லிபுரம், வில்லியம்பாக்கம், மேல்வசலை, வடமணிப்பாக்கம், பொன்விளைந்தகளத்துார், நெல்லிக்குப்பம், கோட்டைக்காடு.

