/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அ.தி.மு.க., 54ம் ஆண்டு துவக்க விழா மறைமலை நகரில் நிகழ்ச்சி விமரிசை
/
அ.தி.மு.க., 54ம் ஆண்டு துவக்க விழா மறைமலை நகரில் நிகழ்ச்சி விமரிசை
அ.தி.மு.க., 54ம் ஆண்டு துவக்க விழா மறைமலை நகரில் நிகழ்ச்சி விமரிசை
அ.தி.மு.க., 54ம் ஆண்டு துவக்க விழா மறைமலை நகரில் நிகழ்ச்சி விமரிசை
ADDED : அக் 17, 2025 11:16 PM

மறைமலை நகர்: மறைமலை நகர் நகராட்சியில், அ.தி.மு.க., நகர செயலர் கோபிகண்ணன் தலைமையில், 54ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் காந்திநகரில், நகராட்சி கவுன்சிலர் கஸ்துாரி தசரதன் ஏற்பாட்டில், 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவ சிலைகளுக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
மறைமலை நகர் பாவேந்தர் சாலையில், 54ம் ஆண்டு விழாவையொட்டி, 'கேக்' வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் பெண்கள், முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், நகர பேரவை செயலர் ஆர்.தசரதன், கே.பாளையம் நகர அவைத் தலைவர் பி.காளி, நகர துணை செயலர், நகர இலக்கிய அணி செயலர் ஆர்.வேலாயுதம், நகர மகளிர் அணி செயலர் உஷா முருகன், நகராட்சி கவுன்சிலர் யுவராஜ்.
நகர கிளை செயலர்கள் ஆர்.தமிழரசு, வேதாச்சலம், பார்த்தசாரதி, சீனிவாசன், பாரதிராஜா, ஜெயக்குமார், எல்.எஸ்.சர்மா, தண்டாயுதபாணி, ஐயப்பன், நளினி ஜெயராமன், ஜெயக்குமார், பிச்சப்பிள்ளை, சாரங்கபாணி, விமல்குமார், பிரபாகரன், டி.ஜானகிராமன், ஸ்ரீமதிமாறன், சத்யநாராயணன், அல்லி முத்து உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.