/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓ.எம்.ஆரில் விவசாய நிலங்கள் பிற பயன்பாட்டுக்காக மாற்றம்
/
ஓ.எம்.ஆரில் விவசாய நிலங்கள் பிற பயன்பாட்டுக்காக மாற்றம்
ஓ.எம்.ஆரில் விவசாய நிலங்கள் பிற பயன்பாட்டுக்காக மாற்றம்
ஓ.எம்.ஆரில் விவசாய நிலங்கள் பிற பயன்பாட்டுக்காக மாற்றம்
ADDED : அக் 18, 2025 10:34 PM
மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில், பழைய மாமல்லபுரம் சாலை பகுதியிலுள்ள விவசாய நிலங்களை, தற்கால வளர்ச்சி தேவைக்காக, பிற பயன்பாட்டு நிலமாக மாற்றுவது அதிகரித்துள்ளது.
சென்னை மத்திய கைலாஷ் - மாமல்லபுரம் இடையே, ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலை உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் திருவான்மியூர் கடந்து, பெருங்குடி முதல் மாமல்லபுரம் வரை, சாதாரண கிராமமாக அமைந்து, விவசாயமே முக்கிய தொழிலாக விளங்கியது.
நாளடைவில் தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் இப்பகுதியில் ஏற்படத் துவங்கி, படிப்படியாக அதிகரித்தன.
முன்பு ஒருவழிப் பாதையாக இருந்த சாலை, அதன் பின் சிறுசேரி வரை, ஆறுவழிப் பாதையாக மேம்படுத்தப்பட்டது.
பொறியியல், மருத்துவ கல்லுாரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவை அதிகரித்தன.
பல்வேறு பகுதியினர் இங்கு குடியேறுவது அதிகரிக்கிறது. இச்சூழலில், ரியல் எஸ்டேட் தொழிலும் சூடுபிடித்துள்ளது.
இத்தொழில் நிறுவனங்கள், தற்கால தேவைக்கேற்ப வீட்டுமனை வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.
இதையடுத்து, சென்னையை ஒட்டி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட நாவலுார், கேளம்பாக்கம், திருப்போரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் தற்போது, பிற தொழில் பயன்பாட்டிற்காக மாற்றப்பட்டு வருகின்றன.
நகர் ஊரமைப்புத் துறையின் கீழ் இயங்கும் மாமல்லபுரம் உள்ளூர் திட்ட குழுமத்திடம், நில வகைப்பாடு மாற்றம் தொடர்பாக, நில உரிமையாளர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
அந்த வகையில், விண்ணப்பங்களை பரிசீலித்து, அத்துறை நிர்வாகம் அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறது.