/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரத்தில் வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் ஒரே இடத்தில் வழங்குவதாக அ.தி.மு.க., குற்றச்சாட்டு
/
தாம்பரத்தில் வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் ஒரே இடத்தில் வழங்குவதாக அ.தி.மு.க., குற்றச்சாட்டு
தாம்பரத்தில் வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் ஒரே இடத்தில் வழங்குவதாக அ.தி.மு.க., குற்றச்சாட்டு
தாம்பரத்தில் வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் ஒரே இடத்தில் வழங்குவதாக அ.தி.மு.க., குற்றச்சாட்டு
ADDED : நவ 28, 2025 04:01 AM

செங்கல்பட்டு, ந தாம்பரம் சட்டசபை தொகுதியில், ஒரே இடத்தில் வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் வழங்குவதாக, அ.தி.மு.க.,வினர் குற்றஞ்சாட்டினர்.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து கலெக்டர் சினேகா தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், சப் - கலெக்டர் மாலதி ஹெலன், வருவாய் கோட்டாட்சியர்கள் தாம்பரம் முரளி, மதுராந்தகம் ரம்யா மற்றும் அ.தி.மு.க., மாவட்ட செயலர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், தி.மு.க., நகர செயலர்கள் மதுராந்தகம் குமார், செங்கல்பட்டு நரேந்திரன் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர் வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அரசியல் கட்சியினர் பேசியதாவது:
அ.தி.மு.க., மாவட்ட செயலர், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன்: தாம்பரம் சட்டசபை தொகுதியில் வணிக வளாகம், கடைகள் ஆகியவற்றில் இரவு நேரங்களில், வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
தொகுதியில் இல்லாதவர்களின் கணக்கீட்டு படிவங்கள், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலமாக பெறப்படுகின்றன. ஒரே இடத்தில் அனைத்து படிவங்களையும் வினியோகம் செய்கின்றனர்.
அதிகாரிகள் கண்காணித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் கனிவாக பேசுகிறார். மற்ற அதிகாரிகள் அரசியல் கட்சியினரை அலட்சியப்படுத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மு.க., நிர்வாகிகள்: சட்டசபை தொகுதியில் உள்ள வாக்காளர்கள் வெளியூர் சென்றுள்ளனர்.
அவர்களுக்கு மீண்டும், கணக்கீட்டு படிவம் வழங்கப்பட வேண்டும். கணக்கீட்டு படிவங்கள் வழங்கியதற்கு, குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அனைத்து வீடுகளுக்கும், கணக்கீட்டு படிவங்கள் வழங்க வேண்டும்.
கஜேந்திரன் பா.ஜ.,: மகேந்திரா வேர்ல்டு சிட்டி பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் நிறுவன ஊழியர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு, விடுமுறை நாட்களில் கணக்கீட்டு படிவங்கள் வழங்கி, மீண்டும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் பேசினர்.
இதுகுறித்து, கலெக்டர் சினேகா பேசியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதியிலும், வாக்காளர்கள் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. படிவங்கள் திரும்பப்பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஊழியர்கள் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் கடுமையாக உழைக்கின்றனர். வாக்காளர்களை விடுபடாமல் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை வழங்க, அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

