/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.17 கோடி நிலம் மோசடி வழக்கு அ.தி.மு.க., நிர்வாகி சிக்கினார்
/
ரூ.17 கோடி நிலம் மோசடி வழக்கு அ.தி.மு.க., நிர்வாகி சிக்கினார்
ரூ.17 கோடி நிலம் மோசடி வழக்கு அ.தி.மு.க., நிர்வாகி சிக்கினார்
ரூ.17 கோடி நிலம் மோசடி வழக்கு அ.தி.மு.க., நிர்வாகி சிக்கினார்
ADDED : செப் 12, 2025 07:48 PM
செங்கல்பட்டு:திருப்போரூர் அருகே கழிப்பட்டூரில், 17 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் வாயிலாக விற்பனை செய்த வழக்கில், அ.தி.மு.க., நிர்வாகியை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
சென்னை, அடையாறு காந்திநகரைச் சேர்ந்த நித்யானந்தம் என்பவர், 1999ம் ஆண்டு, திருப்போரூர் அடுத்த கழிப்பட்டூர் கிராமத்தில், 1.08 சென்ட் நிலம் வாங்கினார். அதை, தன் மனைவி திலகாவதி பெயருக்கு, 2015ம் ஆண்டு பொது அதிகார பத்திரம் எழுதி, திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தார்.
அதன் பின், அதற்கான பத்திரத்தை பெற திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்ற போது, அந்த இடத்தை சென்னையைச் மற்றொரு நித்யானந்தம் என்பவர், சேலத்தைச் சேர்ந்த திலகாவதி என்பவரின் பெயரில் பொது அதிகார பத்திரம் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிந்தது.
இதற்கிடையில், சென்னை பெரம்பூரைச் இன்பராசு என்பவர், திலகாவதி பெயரிலுள்ள இடத்தை, தன் பெயருக்கு பதிவு செய்து, செந்தில்குமார் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.
இதையடுத்து, அடையாறு காந்திநகர் திலகாவதி, தன் சொத்தை மீட்டுத்தரும்படி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் என்பவருக்கு, பொது அதிகார பத்திரம் வழங்கினார்.
இதுகுறித்து வழக்கறிஞர் சரவணன் அளித்த புகாரை அடுத்து, செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் சரவணன் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது.
அதன் பின், காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார், திருப்போரூர் சார் - பதிவாளர் உள்ளிட்ட 38 பேர் மீது, கடந்த மார்ச் மாதம் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் சார் - பதிவாளர், சென்னை பெரம்பூர் இன்பராசு, 41, செந்தில்குமார், 47, உள்ளிட்ட 8 பேரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து தலைமறைவாக இருந்த சென்னை, கோயம்பேடைச் சேர்ந்த அ.தி.மு.க., மாவட்ட வர்த்தக அணி செயலர் மகேஷ், 51, என்பவரை கைது செய்து, செங்கல்பட்டு முதலாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பின், நேற்று முன்தினம், சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை, போலீசார் தேடி வருகின்றனர்.