/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாது மண் கொள்ளையை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
தாது மண் கொள்ளையை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
தாது மண் கொள்ளையை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
தாது மண் கொள்ளையை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 25, 2025 01:15 AM

செய்யூர்:'சிலிக்கான்' தாது மண் கொள்ளையை கண்டித்து, எல்லையம்மன் கோவில் பகுதியில், அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம் கிராமத்தில், தமிழ்நாடு கனிமவள நிறுவனம் சார்பாக, 'டெண்டர்' விடப்பட்டு, 'சிலிக்கான்' தாது மண் எடுக்கப்பட்டு வருகிறது.
இதை கண்டித்து, செய்யூர் அருகே எல்லையம்மன் கோவில் பகுதியில், அ.தி.மு.க., இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலர் பரமசிவம் மற்றும் எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலர் சீனிவாசன் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள்:
கடந்த நான்கு ஆண்டுகளாக, இடைக்கழிநாடு பேரூராட்சி தி.மு.க., செயலர் மோகன்தாஸ், முதலியார்குப்பம் கிராமத்தில் இருந்து அதிக அளவில் சிலிக்கான் தாது மண் ஏற்றுமதி செய்வதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீர் உப்பு நீராக மாறி வருகிறது.
கனிமவளக் கொள்ளையை அதிகாரிகள் தடுக்க வேண்டும். இடைக்கழிநாடு பேரூராட்சியில், கடந்த மூன்று ஆண்டுகளாக, அ.தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
இவ்வாறு, கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க.,வினர், 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.