/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிதாக சிறுபாலம் அமைக்க ஆலப்பாக்கம் வாசிகள் கோரிக்கை
/
புதிதாக சிறுபாலம் அமைக்க ஆலப்பாக்கம் வாசிகள் கோரிக்கை
புதிதாக சிறுபாலம் அமைக்க ஆலப்பாக்கம் வாசிகள் கோரிக்கை
புதிதாக சிறுபாலம் அமைக்க ஆலப்பாக்கம் வாசிகள் கோரிக்கை
ADDED : பிப் 22, 2024 01:06 AM
செங்கல்பட்டு:ஆலப்பாக்கம் கிராமத்தில் சிறுபாலம் கட்டித்தர கோரி, கலெக்டரிடம், கவுன்சிலர் கோரிக்கை மனு அளித்தார்.
இதுகுறித்து ஆலப்பாக்கம் 8வது வார்டு உறுப்பினர் சந்திரகாந்த், கலெக்டர் அருண்ராஜுடம் அளித்த மனு விபரம்:
ஆலப்பாக்கம் ஊராட்சி, சக்தி நகரில் உள்ள மூன்றாவது தெருவில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நகரின், சாலையின் குறுக்கே இருந்த சிறு பாலம், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது.
இதை ஊராட்சி நிர்வாகம் சீரமைக்காததால் துார்ந்துவிட்டது. தற்போது, சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால், கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகிறது. இதுதொடர்பாக, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இப்பகுதி வாசிகளின் நலன் கருதி, இடிந்து விழுந்த சிறுபாலத்தை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.