/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அனைத்து துறை அதிகாரிகள் தலைமையிடத்தில் தங்க உத்தரவு
/
அனைத்து துறை அதிகாரிகள் தலைமையிடத்தில் தங்க உத்தரவு
அனைத்து துறை அதிகாரிகள் தலைமையிடத்தில் தங்க உத்தரவு
அனைத்து துறை அதிகாரிகள் தலைமையிடத்தில் தங்க உத்தரவு
ADDED : நவ 28, 2024 02:41 AM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழையையொட்டி, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினத்தில் இருந்து, வரும் 29ம் தேதி வரை, கன மற்றும் மிக கனமழை பெய்ய உள்ளதாக, இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில், பருவ மழை பணிக்காக நியமனம் செய்யப்பட்ட 33 குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை கண்டறிந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கன மழையின்போது, தாழ்வான பகுதிகளில் தங்கியிருப்பவர்களை, உடனடியாக அருகில் உள்ள நிவாரண பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்க வேண்டும்.
அனைத்து நீர் நிலைகள், அணைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள நீர் நிலைகள் குளங்களில், அபாயகட்ட அளவிற்கு மேல் நீர் தேங்காமல் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
மழை வெள்ள காலங்களில், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தடையின்றி கிடைக்க, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாழ்வான மின் இணைப்புகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
அனைத்து வட்டாட்சியர்களும், கனமழையின் காரணமாக ஏற்படும் சேதாரங்களுக்கு, 48 மணி நேரத்தில்நிவாரணம் வழங்க வேண்டும்.
வட்டாட்சியர்கள், அலுவலக பணியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி அலுவலர்கள் ஆகியோர் தலைமையிடத்தில் தங்கி பணியில் இருக்க வேண்டும்.
கன மழை, வெள்ளம் மற்றும் புயல் காரணமாக ஏற்படும் சேதார விபரங்களை, உடனுக்குடன் கலெக்டருக்கு தெரிவிக்க வேண்டும் என, அனைத்து துறை அதிகாரிகளுக்கு,கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.