/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூர் குடியிருப்பு பகுதியில் குப்பையை எரிப்பதாக குற்றச்சாட்டு
/
சித்தாமூர் குடியிருப்பு பகுதியில் குப்பையை எரிப்பதாக குற்றச்சாட்டு
சித்தாமூர் குடியிருப்பு பகுதியில் குப்பையை எரிப்பதாக குற்றச்சாட்டு
சித்தாமூர் குடியிருப்பு பகுதியில் குப்பையை எரிப்பதாக குற்றச்சாட்டு
ADDED : செப் 23, 2024 06:10 AM

சித்தாமூர் : சித்தாமூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 2,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். துாய்மை பணியாளர்கள் வாயிலாக, ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேங்கும் குப்பை அகற்றப்படுகிறது.
அகற்றப்பட்ட குப்பை, வால்காடு பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவே அமைக்கப்பட்டு உள்ள குப்பை தரம் பிரிக்கும் கூடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, அதன் அருகே எரிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குப்பையை எரிப்பதால் உருவாகும் புகையால், குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், குடியிருப்பு பகுதியில் குப்பை எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.