/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காவலர் குடியிருப்புகளை பராமரிக்க நிதி ஒதுக்கீடு
/
காவலர் குடியிருப்புகளை பராமரிக்க நிதி ஒதுக்கீடு
ADDED : பிப் 22, 2024 10:43 PM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபரம் ஆகிய பகுதிகளில், காவலர் குடியிருப்புகள் உள்ளன. இதில், செங்கல்பட்டு 91, மதுராந்தகம், 21, மாமல்லபுரம் 12 வீடுகள் என, மொத்தம் 124 வீடுகள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக, இந்த வீடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தன.
பின், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக அதிகாரிகள் ஆய்வு செய்து, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தனர். இப்பணிக்காக, 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில், காவலர் குடியிருப்பு பராமரிப்பு மற்றும் திறந்தவெளி கிணறுகளுக்கு மூடி அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. இப்பணிக்கு, 'டெண்டர்' விடும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்பின், பணிகள் துவக்கப்படும் என, காவலர் வீட்டு வசதி கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.