sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் திட்ட பணிகளுக்கு ரூ.3.59 கோடி ஒதுக்கீடு

/

காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் திட்ட பணிகளுக்கு ரூ.3.59 கோடி ஒதுக்கீடு

காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் திட்ட பணிகளுக்கு ரூ.3.59 கோடி ஒதுக்கீடு

காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் திட்ட பணிகளுக்கு ரூ.3.59 கோடி ஒதுக்கீடு


ADDED : நவ 15, 2024 08:13 PM

Google News

ADDED : நவ 15, 2024 08:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், கான்கிரீட் சாலை, தார் சாலை, மழைநீர் கால்வாய், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சிறுபாலம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்துதரக்கோரி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.

இப்பணிகளை செயல்படுத்த, ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து, 3 கோடியே 59 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதியை, ஒன்றிய குழு தலைவர் உதயா ஒதுக்கீடு செய்தார்.

இதைத் தொடர்ந்து, மண்ணிவாக்கம் ஊராட்சியில், குளக்கரை பகுதியில், காரியமேடை, காலனி குளக்கரையில் காரிய மேடை ஆகியவை அமைக்க தலா ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

பிரதான சாலையில் கான்கிரீட் சாலை அமைக்க 22 லட்சம் ரூபாய், வண்டலுார் ஊராட்சியில், வாலாஜாபாத் சாலையிலிருந்து ரயில் நிலையம் வரை கான்கிரீட் சாலை அமைக்க 12 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஓட்டேரி விரிவு பகுதியில், செல்வவிநாயகர் கோவிலுக்கு தார் சாலை அமைக்க 10 லட்சம் ரூபாய், நெடுங்குன்றம் ஊராட்சியில், கருமாரியம்மன் கோவில் 2வது தெருவில் கான்கிரீட் சாலை அமைக்க, 13 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆலப்பாக்கம் மேட்டுத் தெருவில், கான்கிரீட் சாலை அமைக்க ஏழு லட்சம் ரூபாய், ஊனமாஞ்சேரி ஊராட்சியில், மழைநீர் கால்வாய் அமைக்க, 10 லட்சம் ரூபாய், காரணைப்புதுச்சேரி ஊராட்சியில், சிறுபாலம், சாலை அமைக்க. 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

ஊரப்பாக்கம் ஊராட்சியில், ரேவதிபுரம், அம்பிகா நகர், வி.பி., நகர் பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைக்க, தலா ஐந்து லட்சம் ரூபாயும், அஞ்சுகம் நகரில் கான்கிரீட் சாலை, சிறுபாலம் அமைக்க 10 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பகுதியில் எரிமேடை அமைக்க 5 லட்சம் ரூபாய், நல்லம்பாக்கம் ஊராட்சியில், இரண்டு காரிய மேடைகள் அமைக்க 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிங்கபெருமாள்கோவில் ஊராட்சியில், விஞ்சியம்பாக்கம் பகுதியில், அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க 3 லட்சம் ரூபாயும், திருத்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், ஆழ்துளை கிணறு அமைக்க 4 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆப்பூர் ஊராட்சியில், ஆழ்துளை கிணறு, மின் மோட்டார் மற்றும் பைப்லைன் அமைக்க 8 லட்சம் ரூபாயும், நவ இந்தியர் நகர் பகுதியில், குடிநீர் பைப்லைன் அமைக்க 3 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், மொத்தம் 48 பணிகளை செயல்படுத்த, 3 கோடியே 59 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு, கடந்த அக்., 28ம் தேதி டெண்டர் விடப்பட்டது. இப்பணிகள் அனைத்தும் மூன்று மாதங்களில் முடிக்கப்படும் என, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us