/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நீரேற்றும் பிரதான குழாய்கள் மாற்ற ரூ.53.50 லட்சம் ஒதுக்கீடு
/
நீரேற்றும் பிரதான குழாய்கள் மாற்ற ரூ.53.50 லட்சம் ஒதுக்கீடு
நீரேற்றும் பிரதான குழாய்கள் மாற்ற ரூ.53.50 லட்சம் ஒதுக்கீடு
நீரேற்றும் பிரதான குழாய்கள் மாற்ற ரூ.53.50 லட்சம் ஒதுக்கீடு
ADDED : டிச 07, 2024 12:41 AM
செங்கல்பட்டு, மாமண்டூர் பாலாற்றில், நீர் உறிஞ்சு கிணறுகளில் இருந்து நீரேற்றும் பிரதான குழாய்களை மாற்றி அமைக்க, குடிநீர் நிதியில், 53.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு நகரவாசிகளுக்கு, மாமண்டூர் பாலாற்றில் நீர் உறிஞ்சு கிணறுகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மாமண்டூர் பாலாற்றில், நீர் உறிஞ்சு கிணறுகள் உள்ளன. இதில், இரண்டு கிணறுகளில் இருந்து, நிலைய சேகர தொட்டிக்கு செல்லும் நீரேற்றும் பிரதான குழாய்கள் வாயிலாக, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த குழாய் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டதால், புதிய குழாய் அமைக்க வேண்டுமென நகராட்சி பொறியாளர்கள், ஆணையரிடம் தெரிவித்தனர்.
அதன் பின், நீர் உறிஞ்சு கிணறு- - 1ல் இருந்து, நிலைய சேகர தொட்டிக்கு செல்லும் நீரேற்றும் பிரதான குழாய்களை மாற்றி அமைக்க, 17.50 லட்சம் ரூபாயும், நீர் உறிஞ்சு கிணறு - 2ல் இருந்து, நிலைய சேகர தொட்டிக்கு செல்லும் நீரேற்றும் பிரதான குழாய்களை மாற்றி அமைக்க, 36 லட்சம் ரூபாய் என, 53.50 லட்சம் ரூபாய்க்கான கருத்துருவை ஆணையரிடம், பொறியாளர்கள் வழங்கினர்.
இப்பணிகளை செயல்படுத்த, நகரமன்றம் தீர்மானம் நிறைவேற்றி அனுமதி வழங்கி உள்ளது.
இதுகுறித்து, பொறியாளர்கள் கூறியதாவது:
நீரேற்றும் பிரதான குழாய்களை மாற்றி அமைக்கும் பணி, குடிநீர் நிதியில் செயல்படுத்தப்பட உள்ளது. இப்பணிகள், வடகிழக்கு பருவமழை முடிந்தவுடன் துவங்கி நடைபெறும் என, பொறியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.