/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
73 ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு: செங்கையில் 322 பணிகளுக்கு நிர்வாக அனுமதி
/
73 ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு: செங்கையில் 322 பணிகளுக்கு நிர்வாக அனுமதி
73 ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு: செங்கையில் 322 பணிகளுக்கு நிர்வாக அனுமதி
73 ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு: செங்கையில் 322 பணிகளுக்கு நிர்வாக அனுமதி
UPDATED : செப் 05, 2024 02:54 PM
ADDED : செப் 05, 2024 01:14 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள, நான்காம் கட்டமாக, 73 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், நீராதாரங்கள் மேம்பாடு, நெற்களம் அமைத்தல் உள்ளிட்ட, 322 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக, 28.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன. 2008ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சியில், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம், குன்னப்பட்டு ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை, அப்போதைய முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தில், கான்கிரீட் சாலை, குடிநீர், சுடுகாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மீண்டும் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில், முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக, 2021- - 22 மற்றும் 2022- - 23ல், 144 ஊராட்சிகளில், 63.63 கோடி ரூபாயில், கான்கிரீட் சாலைகள், குடிநீர், சுடுகாடு உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டன.
கடந்த 2023- - 24ல், 73 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, 28.94 கோடி ரூபாயில், அங்கன்வாடி மையம், சிமென்ட் கற்கள் சாலை, பள்ளிகளுக்கு கழிப்பறைகள், நீர்நிலைகள் மேம்பாடு, சமுதாய சுடுகாடு ஆகிய பணிகள் செய்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
இதைத் தொடர்ந்து, 2024- - 25ம் ஆண்டில், 73 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, 28.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய்பபட்டுள்ளது.
இதில், 322 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். அதன்பின், கடந்த மார்ச் மாதம் டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.
ஊராட்சிகளில், தேவைப்படும் இடங்களில் உலர் நெற்களம், அங்கன்வாடி மையம், நீராதாரங்கள் மேம்பாடு, ரேஷன் கடை, சிமென்ட் கற்கள் சாலை உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 73 ஊராட்சிகளில் நெல் உலர்களம், அங்கன்வாடி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் கண்காணித்து, விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள்,
செங்கல்பட்டு.
ஒன்றியம் ஊராட்சிகள் பணிகள் - ரூ.கோடியில்
அச்சிறுபாக்கம் 12 61 4.36
மதுராந்தகம் 12 49 4.60
சித்தாமூர் 9 43 3.31
லத்துார் 8 27 3.03
திருக்கழுக்குன்றம் 11 52 4.34
திருப்போரூர் 10 36 3.85
காட்டாங்கொளத்துார் 8 33 3.48
புனிததோமையார்மலை 3 21 1.74
மொத்தம் 73 322 28.75