/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எம்.எல்.ஏ., வை கண்டித்து அல்வா தரும் போராட்டம்
/
எம்.எல்.ஏ., வை கண்டித்து அல்வா தரும் போராட்டம்
ADDED : மார் 02, 2024 12:16 AM
சென்னை:கோரிக்கையை நிறைவேற்றாத எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ., வை கண்டித்து, அல்வா கொடுக்கும் போராட்டம் நடத்திய ஐவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, சூளை, தட்டாங்குளம் பகுதி முழுதும் அங்காளம்மன் கோவில் இடத்தில் இருந்த வீடுகள் மற்றும் கடைகளை, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைத்துள்ளனர்.
இதையடுத்து பாரத் இந்து முன்னணி அமைப்பினரும், அப்பகுதியினரும் லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் ஓட்டு போடப்போவதில்லை எனக்கூறி, தட்டாங்குளம் பகுதியில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர்.
இந்நிலையில், நேற்று எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ., பரந்தாமன், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், 77வது வார்டில், தட்டான்குளம் பகுதி வீட்டு உரிமையாளர்களுக்கு அல்வா கொடுத்து விட்டதாக கூறி, நேற்று எம்.எல்.ஏ., பரந்தாமன் முகமுடி அணிந்து, மக்களுக்கு அல்வா கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.
இதையடுத்து பெண்கள் உள்பட 40க்கும் மேற்பட்டோரை புளியந்தோப்பு போலீசார் கைது செய்தனர்.
இதில் பாரத் இந்து முன்னணி மாநில தலைவர் பிரபு, 43, ஹரீஷ், 23, டில்லிபாபு, 35, பாலாஜி, 53, மற்றும் பெருமாள், 58, ஆகிய ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

