/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரவுடிகளிடம் நடத்திய குறுக்கு விசாரணையில் 'மாஜி' ராணுவ வீரரை அடித்து கொன்றது அம்பலம்
/
ரவுடிகளிடம் நடத்திய குறுக்கு விசாரணையில் 'மாஜி' ராணுவ வீரரை அடித்து கொன்றது அம்பலம்
ரவுடிகளிடம் நடத்திய குறுக்கு விசாரணையில் 'மாஜி' ராணுவ வீரரை அடித்து கொன்றது அம்பலம்
ரவுடிகளிடம் நடத்திய குறுக்கு விசாரணையில் 'மாஜி' ராணுவ வீரரை அடித்து கொன்றது அம்பலம்
ADDED : பிப் 13, 2025 02:08 AM
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 47. முன்னாள் ராணுவ வீரர்; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
கடந்த 3ம் தேதி, ஒரு விபத்தில் சிக்கி அடிபட்டு உயிரிழந்ததாக, போலீசார் வழக்கு பதிந்தனர்.
இந்நிலையில், சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ரவுடிகளான மணிகண்டன், 23, லோகேஸ்வரன், 23, மற்றும் ஸ்ரீராம், 20, ஆகிய மூவரை, சென்னை போலீசார் தேடி வந்தனர்.
இவர்கள், திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த பகவதிபட்டாபிராமபுரத்தில் பதுங்கியிருப்பது, போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, மேற்கண்ட மூவரையும் கைது செய்த போலீசார், இவர்களுக்கு தங்க இடம் கொடுத்த, அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ், 30, என்பவரையும் கைது செய்தனர்.
ரவுடிகள் மூன்று பேரிடமும், கடந்த சில நாட்களாக சென்ற இடங்கள், செய்த செயல்கள் குறித்து, போலீசார் குறுக்கு விசாரணை நடத்தினர்.
இதில், முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசன் இறப்பிற்கு, இவர்கள் காரணமாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி, மணிகண்டன், லோகேஸ்வரன், ஸ்ரீராம், சதீஷ் ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
ராணுவ வீரர் கொலை குறித்து, போலீசார் கூறியதாவது:
ரியல் எஸ்டேட் தொழிலில் வெங்கடேசனுக்கும், சதீஷுக்கும் இடையே தொழில் போட்டி இருந்துள்ளது. அதனால், வெங்கடேசனை கார் ஏற்றி கொல்ல திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 3ம் தேதி, வெங்கடேசன் வீட்டிலிருந்து, திருவள்ளூருக்கு அத்திப்பட்டு சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, ராமலிங்காபுரம் அருகே, 'வோக்ஸ்வாகன்' காரில் மோதி, அவரை கொல்ல முயன்றனர்.
வாகனம் மட்டும் சேதமான நிலையில், வெங்கேடசன் தப்பிவிட்டார். இதையடுத்து ரவுடிகள் மூன்று பேர் மற்றும் சதீஷ், அவரது தம்பி பிரசாந்த் ஆகியோர் சேர்ந்து, காரிலிருந்து இறங்கி, இரும்பு ராடால், வெங்கடேசனை சரமாரி தாக்கி அடித்தே கொலை செய்துள்ளனர்.
வாகனம் சேதமடைந்திருந்ததால், விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்தது. சென்னை போலீசார் விசாரணைக்கு பின், வெங்கடேசன் கொலை செய்யப்பட்டிருந்ததை அறிந்து, கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சென்னை போலீசார் நால்வரிடமும் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில் சதீஷின் தம்பி பிரசாந்தை, நேற்று முன்தினம் இரவு, திருவாலங்காடு போலீசார் கைது செய்தனர்.