/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விபத்தில் காயமடைந்தவரின் பணம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
/
விபத்தில் காயமடைந்தவரின் பணம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
விபத்தில் காயமடைந்தவரின் பணம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
விபத்தில் காயமடைந்தவரின் பணம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
ADDED : ஜன 03, 2024 09:47 PM

செங்கல்பட்டு:மதுராந்தகம் அடுத்த எலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான் சயத் ரஹீம், 21. இவர், இருசக்கர வாகனத்தில், நேற்று சோத்துப்பாக்கம் சென்று கொண்டிருந்தார்.
மேல்மருவத்துார் அடுத்த ராமபுரம் பகுதியில் சென்ற போது, அவ்வழியாக சென்ற கார், அவரது வாகனத்தின் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயத்துடன் மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தோர், 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் தனசேகர், ஓட்டுனர் பிரகாஷ் ஆகியோர், அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.
சுல்தான் சயத் ரஹீம் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது, அதில், 3 லட்சத்து 50 ஆயிரத்து 610 ரூபாய் இருந்தது.
இதுகுறித்து, ஆம்புலன்ஸ் மேலாளர் ராஜ சேகர், சுல்தான் சயத் ரஹீமின் தந்தைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின், மருத்துவமனைக்கு வந்த அவரது தந்தை முகமது அலியிடம், பணத்தை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஒப்படைத்தனர்.