/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆமூர் -- குன்னப்பட்டு சாலையில் பாலம் அமைக்க பூமி பூஜை
/
ஆமூர் -- குன்னப்பட்டு சாலையில் பாலம் அமைக்க பூமி பூஜை
ஆமூர் -- குன்னப்பட்டு சாலையில் பாலம் அமைக்க பூமி பூஜை
ஆமூர் -- குன்னப்பட்டு சாலையில் பாலம் அமைக்க பூமி பூஜை
ADDED : பிப் 14, 2024 11:17 PM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய ஆமூர்- - குன்னப்பட்டு சாலையில், சிறிய அளவிலான தரைப்பாலம் இருந்தது.
இதனால், புயல், மழை நேரத்தில், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், அங்கு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, நபார்டு திட்டத்தில், 1.81 கோடி ரூபாய் மதிப்பில், புதிய உயர்மட்ட பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.
அதேபோல், மேலையூர் ஊராட்சியில், ஒன்றிய பொது நிதியில், 24.50 லட்சம் மதிப்பில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கவும் பூமி பூஜை விழா நடந்தது.