/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடலரிப்பால் வெளிப்பட்ட பழங்கால கிணறு
/
கடலரிப்பால் வெளிப்பட்ட பழங்கால கிணறு
ADDED : அக் 08, 2024 01:37 AM

மாமல்லபுரம், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சிப் பகுதியில், மீனவ பகுதி உள்ளது. இப்பகுதியில், நீண்டகாலத்திற்கு முன், இயல்பான கடற்கரை இருந்தது. நாளடைவில் கடலரிப்பு ஏற்பட்டு, மீனவர்களின் வீடுகள் கடலுக்கு இரையாகின. தெருக்கள் மூழ்கியுள்ளன.
சுனாமி தாக்குதலுக்கு பின், கடலரிப்பு நீடித்து வருகிறது. தற்போது, கடல்நீரில் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்காக, கடலில் பாறைக்கற்கள் குவிக்கப்பட்டதால், இப்பகுதியில் நிலப்பகுதியில் கடல்நீர் புகுந்து, கடலரிப்பு மேலும் அதிகரித்து வருகிறது.
கடலரிப்பு, கடல்நீர் உட்புகுவது உள்ளிட்ட அபாயத்தால், கடல் வீடுகளை நெருங்குகிறது. கடலுக்கும், வீடுகளுக்கும், 100 மீட்டருக்கும் குறைவான இடைவெளியே உள்ளது.
இங்குள்ள வெங்கட்டம்மன் கோவில், கடல் அரிப்பில் படிப்படியாக இடிந்து, கடலில் சரிந்து வருகிறது. கோவில் முழுதும் கடலில் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவி லை ஒட்டி, வடபுறம் நீண்டகாலத்திற்கு முன் நிலத்தடியில் அமைக்கப்பட்ட பழைய குடிநீர் கிணறு, தற்போது கடலரிப்பு காரணமாக வெளிப்பட்டுள்ளது.
செங்கற்களால் அந்த கிணறு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதிவரை குடியிருப்புகள் இருந்தது கண்டு, அப்பகுதிவாசிகள் வியந்து பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து, மீனவர்கள் கூறியதாவது:
இப்போதுள்ள கடற்கரையில் குடிநீர் கிணறு இருந்ததை, நாங்கள் இதுவரை பார்த்ததில்லை. கடல் நீர் புகுந்து மண் அரிக்கப்பட்டுள்ளதால், கடற்கரையில் புதைந்திருந்த பழைய குடிநீர் கிணறு, வெளியே தெரிகிறது.
எங்கள் மூதாதையர் காலத்தில் உருவாக்கிய கிணறை, இப்போது அதிசயமாக பார்க்கிறோம். கடலரிப்பால் எங்களின் வீடுகளையும், கடல் நெருங்குகிறது. கடலரிப்பை தடுக்க துாண்டில் வளைவு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.