/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கார்கள் நேருக்கு நேர் மோதல் வாயலுாரில் முதியவர் பலி
/
கார்கள் நேருக்கு நேர் மோதல் வாயலுாரில் முதியவர் பலி
கார்கள் நேருக்கு நேர் மோதல் வாயலுாரில் முதியவர் பலி
கார்கள் நேருக்கு நேர் மோதல் வாயலுாரில் முதியவர் பலி
ADDED : செப் 24, 2024 04:50 AM
சதுரங்கப்பட்டினம் : கூவத்துார் அடுத்த நெடுமரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 62. நேற்று காலை, மருமகள் மோனிகா, 28, பேத்தி அர்ஷிதா, 2, ஆகியோருடன், ஸ்விப்ட் டிசையர் காரில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். காரை வெங்கடேசன் ஓட்டினார்.
கல்பாக்கம் அடுத்த வாயலுார் செல்லியம்மன் கோவில் வளைவு பகுதியில், 7:30 மணிக்கு கார் கடந்தது. அப்போது, சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற கார், எதிரில் வந்த நிலையில், இரண்டு கார்களும் நேருக்குநேர் மோதிக் கொண்டன.
வெங்கடேசன் சென்ற கார் சரிவில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் பலியானார். மருமகள், பேத்தி இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
தகவல் அறிந்து சென்ற சதுரங்கப்பட்டினம் போலீசார், அப்பகுதிவாசிகளுடன் இணைந்து, காயங்களுடன் காருக்குள் சிக்கியவர்களை மீட்டனர். மற்றொரு காரில் வந்தவர்கள், லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து, சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

