/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த பழைய குற்றவாளி கைது
/
ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த பழைய குற்றவாளி கைது
ADDED : அக் 15, 2024 07:55 PM
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த கொளத்துார் பகுதியில், நேற்று காலை பாலுார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
கொளத்துார் டாஸ்மாக் அருகில், பாழடைந்த கட்டடத்தை சோதனை செய்த போது, அதன் உள்ளே இருந்த நபர், போலீசாரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தப்ப முயன்றார். அப்போது, படிக்கட்டில் தவறி விழுந்து, அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது.
அந்த நபரை மீட்ட போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். இச்சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் செங்கல்பட்டு அடுத்த குண்டூர் பகுதியை சேர்ந்த நரேஷ், 28, என்பது தெரிந்தது.
இவர் மீது, மறைமலை நகர், செங்கல்பட்டு தாலுகா, நகர காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கஞ்சா, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், கொளத்துார் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட, ஆயுதங்களுடன் சுற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, நரேஷை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.