/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அனகாபுத்துார் பாதாள சாக்கடை திட்டம் அடுத்த மாதம் செயல்பாடு துவக்கம் - சில தகவல் தேவை
/
அனகாபுத்துார் பாதாள சாக்கடை திட்டம் அடுத்த மாதம் செயல்பாடு துவக்கம் - சில தகவல் தேவை
அனகாபுத்துார் பாதாள சாக்கடை திட்டம் அடுத்த மாதம் செயல்பாடு துவக்கம் - சில தகவல் தேவை
அனகாபுத்துார் பாதாள சாக்கடை திட்டம் அடுத்த மாதம் செயல்பாடு துவக்கம் - சில தகவல் தேவை
ADDED : மார் 28, 2025 09:46 PM
பம்மல்,:தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலத்தில் அடங்கிய, பம்மல் - அனகாபுத்துார் பகுதிகள், நாளுக்கு நாள் அசுர வளர்ச்சியடைந்து வருகின்றன.
குடியிருப்புகளின் வருகையால், குடிநீர் வசதி மற்றும் கழிவுநீர் அகற்றும் கட்டமைப்பு அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
குடியிருப்புளில் இருந்து வெளியேற்றும் கழிவுநீர், திருநீர்மலை, பாலாஜி, சாந்தி, காயிதே மில்லத், அருள் மற்றும் வெங்கடேஷ்வரா நகர்கள் வழியாக, அடையாறு ஆற்றில் கலக்கிறது.
இதனால், அடையாறு ஆறு மாசடைந்து, துர்நாற்றம் வீசுகிறது. நிலத்தடி நீரும் மாசடைகிறது.
இதை தடுக்கும் வகையில், ஒருங்கிணைந்த முறையில் பாதாள சாக்கடை திட்டப் பணி, 211.15 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது.
பம்மல் பகுதியில், 111 கி.மீ., துாரத்திற்கு குழாய்கள் பதிக்கப்படுகின்றன. இங்கு, நான்கு கழிவுநீர் உந்து நிலையம், ஒரு கழிவு நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
அனகாபுத்துாரில், 58 கி.மீ., துாரத்திற்கு குழாய்கள் பதிக்கப்படுகின்றன. இங்கு, ஐந்து கழிவுநீர் உந்து நிலையம், நான்கு கழிவு நீரேற்றும் நிலையம் அமைக்கப்படுகிறது
அனகாபுத்துாரில் 100 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. அடுத்ததாக, வீட்டு இணைப்பு கொடுக்கப்பட்டு, அடுத்த ஒரு மாதத்தில், அங்குள்ள நான்கு வார்டுகளில் இத்திட்டம் பயன்பாட்டிற்கு வருகிறது.
பம்மலை பொறுத்தவரை, 85 சதவீத பணிகள் முடிந்துள்ளன. அங்கு, அடுத்த இரண்டு மாதங்களில் எஞ்சிய பணிகள் முடிக்கப்பட்டு, பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.