/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அங்கன்வாடி மையம் சேதம் சீரமைக்க வேண்டுகோள்
/
அங்கன்வாடி மையம் சேதம் சீரமைக்க வேண்டுகோள்
ADDED : ஜன 30, 2024 08:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தாமூர்:சித்தாமூர் அருகே போந்துார் ஊராட்சிக்கு உட்பட்ட வயலுார் கிராமத்தில், அரசு பள்ளி வளாகத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
அங்கன்வாடி மையத்தில், 10 குழந்தைகள் படிக்கின்றனர். மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 20 பேர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.
இந்த கட்டடம், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது, கட்டடம் சேதமடைந்து, மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகுவதாக கூறப்படுகிறது. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கன்வாடி மையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.