ADDED : ஜன 18, 2025 10:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூவத்துார்:கூவத்துார் அடுத்த, கடலுார் ஊராட்சிப் பகுதிக்கு உட்பட்ட, கூனியாமேடு, வேப்பஞ்சேரி ஆகிய பகுதிகளில், அங்கன்வாடி மையங்கள் இயங்குகின்றன. அவற்றின் பழைய கட்டடங்கள், தற்போது சீரழிந்த நிலையில், அங்கு குழந்தைகளை தங்க வைக்க இயலவில்லை. புதிய கட்டடம் கட்ட, அப்பகுதியினர் வலியுறுத்தினர்.
இதையடுத்து, சென்னை அணுமின் நிலைய, பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தில் கட்ட, நிலைய நிர்வாகத்திடம், மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்தது. நிலைய நிர்வாகம் பரிசீலித்து, தலா 31.50 லட்சம் ரூபாய் மதிப்பில், அங்கன்வாடி கட்டடம் கட்ட முடிவெடுத்து, நிதி ஒதுக்கியது. நிலைய இயக்குனர் சேஷையா, நேற்று, பூமிபூஜையுடன் கட்டுமானப் பணிகளை துவக்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஜெய்சங்கர், நிலைய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.