ADDED : அக் 10, 2025 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம்:செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த பட்டிக்காடு ஊராட்சி, புலியூர் பகுதி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், அங்கன்வாடி மையம் இயங்குகிறது.
அதன் கட்டடம் பாழடைந்து பழுதான நிலையில், புதிய கட்டடம் கட்டுமாறு, பெற்றோர் வலியுறுத்தினர். மாவட்ட நிர்வாகம் இத்திட்டத்தை, சென்னை அணுமின் நிலைய சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்துமாறு பரிந்துரைத்தது.
அணுமின் நிலைய நிர்வாகம், அதற்கான நிதி ஒதுக்கி, கடந்த பிப்ரவரியில் கட்டுமானப் பணிகளை துவக்கி, தற்போது 27.30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று நடந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், அணுமின் நிலைய இயக்குநர் சேஷையா கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.