/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மது அருந்துவதை தட்டி கேட்ட நபர்களுக்கு அரிவாள் வெட்டு
/
மது அருந்துவதை தட்டி கேட்ட நபர்களுக்கு அரிவாள் வெட்டு
மது அருந்துவதை தட்டி கேட்ட நபர்களுக்கு அரிவாள் வெட்டு
மது அருந்துவதை தட்டி கேட்ட நபர்களுக்கு அரிவாள் வெட்டு
ADDED : அக் 10, 2025 10:45 PM
கிளாம்பாக்கம்:வண்டலுார் அடுத்த கொளப்பாக்கம் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெண்ணிலா, 48. நேற்று முன்தினம் மாலை, இவரது வீட்டின் அருகில் அமர்ந்து, சிலர் மது அருந்தியுள்ளனர்.
இதை வெண்ணிலா தட்டிக் கேட்ட போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்து சென்ற நால்வரும், சிறிது நேரம் கழித்து கத்தியுடன் வந்து, வெண்ணிலாவின் அக்கா மகன்களான அதே பகுதியைச் சேர்ந்த எபினேசன், 23, விஜய், 23, பக்கத்து வீட்டு நபரான பாலாஜி உள்ளிட்ட மூவரை, கைகளில் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து வெண்ணிலா அளித்த புகாரின்படி, கிளாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிச் சென்ற நால்வரை தேடி வருகின்றனர்.