/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போதையில் நாக்கு வறண்டு தனியார் ஊழியர் உயிரிழப்பு
/
போதையில் நாக்கு வறண்டு தனியார் ஊழியர் உயிரிழப்பு
ADDED : அக் 10, 2025 10:46 PM
மதுராந்தகம்:செங்கல்பட்டு அருகே, மது போதையில் நாக்கு வறண்டு, தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம், படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன், 31. மாமண்டூர், படாளம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் மொபைல்போன் டவர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, மாமண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துமாரியம்மன் கோவில் பின்புறம், பாலாற்று படுகையில் இறந்து கிடந்தார். அவர் மது அருந்தியது தெரிந்தது. உடலை கைப்பற்றி படாளம் போலீசார் விசாரித்தனர். மது போதையில் நாக்கு வறண்டு உயிரிழந்ததாக, முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.
நேற்று, செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை முடிந்து, உறவினர்களிடம் இளங்கோவன் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, படாளம் போலீசார் விசாரிக்கின்றனர்.