/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பணி முடிந்தும் திறக்கப்படாத கட்டடம் சமுதாய கூடத்தில் இயங்கும் அங்கன்வாடி
/
பணி முடிந்தும் திறக்கப்படாத கட்டடம் சமுதாய கூடத்தில் இயங்கும் அங்கன்வாடி
பணி முடிந்தும் திறக்கப்படாத கட்டடம் சமுதாய கூடத்தில் இயங்கும் அங்கன்வாடி
பணி முடிந்தும் திறக்கப்படாத கட்டடம் சமுதாய கூடத்தில் இயங்கும் அங்கன்வாடி
ADDED : ஜன 17, 2025 09:51 PM
பெருங்களத்துார்:பெருங்களத்துார், என்.ஜி.ஓ., காலனி, 2வது தெருவில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.
இந்த கட்டடம் போதுமான வசதிகளுடன் இல்லாததால், இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, தாம்பரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 20 லட்சம் ரூபாய் செலவில், புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கியது.
அதனால், அருகே பூங்காவை ஒட்டியுள்ள, பராமரிப்பின்றி காணப்படும் சமுதாய நலக்கூட்டத்திற்கு அங்கன்வாடி மாற்றப்பட்டது.
இந்நிலையில், புதிய கட்டடப் பணிகள் முடிந்து, மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும், இதுவரை திறக்கப்படவில்லை. அதனால், பராமரிப்பில்லாத சமுதாய நலக்கூடத்திலேயே அங்கன்வாடி இயங்கி வருகிறது.
பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
பழைய பெருங்களத்துாரில், சுகாதார நிலையம் கட்டி, ஆறு மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது.
இரண்டு கோடி ரூபாய் செவில் கட்டப்பட்ட வணிக வளாகத்திற்கான டெண்டரில் குளறுபடி ஏற்பட்டு, அதுவும் அப்படியே கிடக்கிறது. தற்போது, அங்கன்வாடி கட்டடம், மூன்று மாதங்களாக திறக்கப்படவில்லை.
கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்கள் திறக்கப்படாமல் இருப்பது, மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலாகும்.
எனவே, குழந்தைகளின் நலன் கருதி, அங்கன்வாடி கட்டடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.