/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரத்தில் ஆஞ்சனேயர் ஊஞ்சல் சேவை
/
மாமல்லபுரத்தில் ஆஞ்சனேயர் ஊஞ்சல் சேவை
ADDED : டிச 30, 2024 01:56 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம், பக்த ஆஞ்சனேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி உற்சவம், ஊஞ்சல் சேவையுடன் நடந்தது.
மாமல்லபுரம், கிழக்கு ராஜ வீதி பகுதியில் உள்ள பக்த ஆஞ்சனேயர் கோவில் பிரசித்தி பெற்றது. பல ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் சாலை விபத்தில் இறந்த குரங்கு, இங்கு அடக்கம் செய்யப்பட்டு, பக்த ஆஞ்சனேயர் கோவில் ஏற்படுத்தப்பட்டு, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
அனுமன் ஜெயந்தி உற்சவம், நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், கடந்த 26ம் தேதி, பந்தக்கால் அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக, சுவாமி சிறப்பு அபிேஷகம் கண்டு, இரவு ஊஞ்சல் சேவையாற்றி, மஹா தீபாராதனையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, ஜெயந்தி உற்சவம் கண்டு, மாலை 4:30 மணிக்கு மேல் வீதியுலா செல்கிறார்.