/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மூதாட்டி கொலையில் மேலும் ஒருவர் கைது
/
மூதாட்டி கொலையில் மேலும் ஒருவர் கைது
ADDED : செப் 21, 2024 10:01 PM
சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த பொம்மராஜபுரத்தைச் சேர்ந்த கண்ணன் மனைவி கன்னியம்மாள், 80. கணவர் இறந்த நிலையில், தனியே வசித்தார். வீட்டின் முன் சிற்றுண்டி வியாபாரம் செய்து வந்தார்.
கடந்த 16ம் தேதி மர்ம நபர்கள், அவரது வீடு புகுந்து, 1.5 சவரன் நகைகளை பறிப்பதற்காக கழுத்தை அறுத்து, கொடூரமாக கொலை செய்து தப்பினர்.
இதுகுறித்து, சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். நல்லாத்துாரைச் சேர்ந்த சச்சின் என்ற திவ்வியராஜ், 24, ஆயப்பாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ், 19, பொம்மராஜபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ், 20, பிரபாகரன், 17, ஆகியோரை, கடந்த 19ம் தேதி கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த ஆயப்பாக்கத்தைச் சேர்ந்த பிரதாப், 25, என்பவரை நேற்று கைது செய்தனர்.