/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடைவரைக்குள் ஒழுகும் மழைநீர் மாற்றுமுறை கையாள எதிர்பார்ப்பு
/
குடைவரைக்குள் ஒழுகும் மழைநீர் மாற்றுமுறை கையாள எதிர்பார்ப்பு
குடைவரைக்குள் ஒழுகும் மழைநீர் மாற்றுமுறை கையாள எதிர்பார்ப்பு
குடைவரைக்குள் ஒழுகும் மழைநீர் மாற்றுமுறை கையாள எதிர்பார்ப்பு
ADDED : நவ 17, 2024 09:49 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் குடைவரையில் மழைநீர் உட்புகாமல் தடுக்க முயன்றும், தொடர்ந்து மழைநீர் பெருக்கெடுப்பதால், மாற்றுமுறையை கையாள வேண்டும் என, தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை, தொல்லியல் துறை பாதுகாத்து பராமரிக்கிறது. அவற்றில் மாசுக்கள் படிந்து பொலிவிழக்கும்போது, அத்துறையினர் மாசுக்களை அகற்றி துாய்மைப்படுத்துகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, குடைவரைகள் அமைந்துள்ள பாறைகுன்றுகளின் மேற்புறம் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக, குடைவரையின் உட்புறம் மழைநீர் பெருக்கெடுக்கிறது.
அர்ஜுனன் தபசு சிற்பம் மற்றும் பஞ்சபாண்டவர் குடைவரை ஆகியவை அமைந்துள்ள பாறை குன்றின் மேற்பரப்பில், நீண்டகாலத்திற்கு முன் ஏற்பட்ட விரிசலால், குடைவரையின் உட்புறம் மழைநீர் பெருக்கெடுக்கிறது.
வருங்காலத்தில் குடைவரை மேல்தளத்தில், விரிசல் மேலும் விரிவடைந்து பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. இதை தவிர்க்க கருதி, மழைநீர் உட்புகாமல் தடுக்க, அத்துறை பொறியாளர் ஆய்வு செய்தார். விரிசல் அதிகரிக்கிறதா என்பதை அறிய, விரிசல் இடையில், குறுகிய தடிமன் கண்ணாடி பொருத்தப்பட்டது.
இந்நிலையில், பாறைகுன்று மேற்பரப்பில், குடைவரை பகுதியில் மழைநீர் பெருக்கெடுப்பதை தடுக்க, உயரம் குறைவான தடுப்பு, அண்மையில் அமைக்கப்பட்டது. விரிசல் பகுதிகளை கண்டறிந்து, மழைநீர் உட்புகாமல் தடுக்க, கசிவை தடுக்கும் ரசாயன திரவம், சுண்ணாம்பு, சிறுகற்கள் கலந்த கலவை ஆகியவற்றையும் நிரப்பினர்.
இதற்கும் கட்டுப்படாமல், குடைவரைக்குள் மழைநீர் தொடர்ந்து பெருக்கெடுப்பது தொடர்கிறது. இதை தவிர்க்க, மாற்றுமுறையை கையாள வேண்டும் என, தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.