/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆபத்சகாயேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விமரிசை
/
ஆபத்சகாயேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விமரிசை
ADDED : பிப் 17, 2025 01:19 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியம், புதுப்பட்டு ஊராட்சியில், ராமபிரானும், அகத்தியரும் வழிபட்ட, பழமையான ஆனந்தவல்லி அம்பிகா சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் கும்பாபிஷேக பணிகளுக்காக பந்தக்கால் நடப்பட்டது.
முதல் கால பூஜையுடன், மங்கல இசை, கணபதி பூஜை, சிறப்பு வேள்வியுடன் விழா தொடங்கியது.
பின், இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகள் நடந்தன.
நேற்று, யாகசாலை பூஜையில், வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு வரப்பட்டு, காலை 9:00 -- 10:00 மணிக்குள், மேள தாளங்கள் முழங்க, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடந்தது.
பின், கோபுர கலசத்திற்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக மஹாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன், விழா குழுவினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் பங்கேற்றனர். அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

