/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இளநிலை வரைவு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
/
இளநிலை வரைவு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : பிப் 09, 2023 12:11 AM
செங்கல்பட்டு:செங்கை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
அரசு அலுவலகங்களில், காலியாக உள்ள, இளநிலை வரைவு அலுவலர் பணி காலியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இப்பணி காலியிடங்களுக்கு கல்வித் தகுதி பி.இ., மற்றும் டிப்ளமா சிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி ஆகும். மொத்த காலி பணியிடங்கள் தோரயமாக 1083 ஆகும். ஆன்லைனில் வரும் மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விபரங்கள் அறிந்து கொள்ள www.tnpsc.gov.in இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதுதொடர்பான தகவல்களுக்கு, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ 044-- 27426020, 94990 55895 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.