/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயல் அலுவலர் நியமனம்
/
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயல் அலுவலர் நியமனம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயல் அலுவலர் நியமனம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயல் அலுவலர் நியமனம்
ADDED : பிப் 14, 2024 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றிய ஜெயக்குமார், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், பேரூராட்சிகள் உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்று, திருவள்ளூர் மண்டலத்திற்கு மாறுதலானார்.
அதன்பின், திருக்கழுக்குன்றத்திற்கு மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், கூடுதல் பொறுப்பு வகித்தார்.
ஆறு மாதங்களுக்கும் மேலாக, செயல் அலுவலர் இன்றி, பணிகளில் தாமதம் ஏற்பட்டு, அலுவலக சேவைகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் செயல் அலுவலர் லதா, திருக்கழுக்குன்றத்திற்கு மாற்றப்பட்டு, நேற்று பொறுப் பேற்றுக் கொண்டார்.