/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெருக்கரணை சாலை சீரமைப்பு பணிகள் மீண்டும் துவக்கம்
/
பெருக்கரணை சாலை சீரமைப்பு பணிகள் மீண்டும் துவக்கம்
பெருக்கரணை சாலை சீரமைப்பு பணிகள் மீண்டும் துவக்கம்
பெருக்கரணை சாலை சீரமைப்பு பணிகள் மீண்டும் துவக்கம்
ADDED : செப் 22, 2024 03:13 AM
சித்தாமூர்:சித்தாமூர் அருகே பழவூர் கிராமத்தில், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு நெடுஞ்சாலையில் இருந்து பெருக்கரணை கிராமத்திற்கு செல்லும், 3.6 கி.மீ., அளவிலான தார் சாலை உள்ளது.
இந்த சாலையை கன்னிமங்கலம், கரிக்கந்தாங்கல்உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த சாலை, பல ஆண்டுகளாக சேதம் அடைந்து இருந்ததால், சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு ஆக., மாதம் சீரமைப்புப் பணிகள் துவங்கப்பட்டன.
அதில், 1.3 கி.மீ., நீளத்திற்கு தார் சாலை சீரமைக்கப்பட்ட நிலையில், கடந்த நான்கு மாதங்களாக சாலை சீரமைப்புப் பணி பாதியில் நிறுத்தப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், ஜல்லிக்கற்கள் கொட்டி நிரவப்பட்ட சாலையில், கடந்து செல்லவே பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதன் விளைவாக, சாலை சீரமைப்புப் பணி மீண்டும் துவங்கப்பட்டு, தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
அடுத்த சில நாட்களில், சாலை சீரமைப்புபணி முழுதும் முடிக்கப்பட்டு, மக்கள்பயன்பாட்டிற்கு வரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.