/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மக்கள் மனுக்களை கிடப்பில் போடுவதா? அதிகாரிகள் மீது அமைச்சர் ஆவேசம்
/
மக்கள் மனுக்களை கிடப்பில் போடுவதா? அதிகாரிகள் மீது அமைச்சர் ஆவேசம்
மக்கள் மனுக்களை கிடப்பில் போடுவதா? அதிகாரிகள் மீது அமைச்சர் ஆவேசம்
மக்கள் மனுக்களை கிடப்பில் போடுவதா? அதிகாரிகள் மீது அமைச்சர் ஆவேசம்
ADDED : டிச 26, 2024 12:53 AM

செங்கல்பட்டு, ''பொதுமக்களின்மனுக்கள் மீது, அரசு துறைகளின் அதிகாரிகள் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடுவது சரியல்ல; நடவடிக்கை எடுக்கவில்லை என்றகுற்றச்சாட்டு வருகிறது. இனிமேலும் அப்படி இருக்காமல், உடனடியாக தீர்வு காண வேண்டும்,'' என, அமைச்சர் அன்பரசன்,அதிகாரிகளை எச்சரித்தார்.
செங்கல்பட்டு கலெக்டர்அலுவலக கூட்ட அரங்கில், நேற்று முன்தினம் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம், சிறு, குறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் மனுக்கள் பெற்றார்.
நடவடிக்கை
இதில், இலவச வீட்டுமனை பட்டா, மின்கம்பம் மாற்றம், சாலை வசதி, பேருந்து வசதி, பட்டா திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 406 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மீது,சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சர் உத்தரவிட்டார்.
மானியம்
கலெக்டர் அருண்ராஜ், செங்கல்பட்டு தி.மு.க.., --- எம்.எல்.ஏ., வரலட்சுமி,உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதன்பின், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், முருகமங்கலம் திட்டப்பகுதியில், 25 பயனாளி களுக்கு, தலா 12.6 லட்சம்ரூபாய் என, மொத்தம்3.01 கோடி ரூபாய் மதிப்பில், வீடு கிரயப்பத்திரங்கள், மூன்று பயனாளிகளுக்கு, 70 சதவீத மானியத்துடன் கூடிய பவர் டிரில்லர்களைஅமைச்சர் வழங்கினார்.
அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:
குறுவட்ட அளவிலான மனுக்கள் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை சம்மந்தப்பட்ட மனுக்கள் ஏராளமாக வருகின்றன.
இந்த மனுக்கள் மீது, அதிகாரிகள் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு, உடனடியாக தீர்வுகாண வேண்டும். தீர்வுகாண முடியாத மனுக்களுக்கு, உரிய காரணம் என்னவென்று தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
கலெக்டர் தலைமையில் வாரந்தோறும் திங்கட்கிழமை குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது. கிராமங்களிலும் மனுநீதி முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை, ஏராளமாக அளித்து முறையிடுகின்றனர். ஒவ்வொரு மனுவையும் பரிசீலித்து, கள ஆய்வு நடத்திதான் தீர்வு காண்கிறோம். பணிச்சுமை, கோரிக்கையின் தன்மை உள்ளிட்ட காரணங்களால், தீர்வு காண்பது சற்று தாமதமாகலாம். நாங்கள் கள ஆய்விற்கு செல்லாமல் இல்லை.
- வருவாய், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள்.