/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணியர் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
/
கிளம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணியர் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
கிளம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணியர் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
கிளம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணியர் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
ADDED : பிப் 02, 2025 08:07 PM
கூடுவாஞ்சேரி:கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் அதிக அளவில் வந்து சென்று வருகின்றனர்.
நேற்று, முன் தினம் வார விடுமுறை மற்றும் சுப முகூர்த்த நாட்களை முன்னிட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிக அளவில் வந்தனர்.
வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் சென்று விட்டது, மேலும் முன்பதிவு செய்த பயணிகள் பதிவு செய்த பேருந்தில் பயணம் மேற்கொண்டனர் .
முன்பதிவு செய்யாத பயணிகள் நேற்று முன்தினம் இரவு 10: 30 மணிக்கு மேல் மதுரை , திருச்சி, விழுப்புரம் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்காக, அதிகமான பயணிகள் வந்தனர். பேருந்துகள் இல்லாததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர்.
தொடர்ந்து, பேருந்து வராததால் அங்கு பணியில் இருந்த, போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள்,
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய போக்குவரத்து துறை அதிகாரிகள் , கிளாம்பாக்கம் போலீசார் வந்து, சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்து பயணியரை அனுப்பி வைத்தனர்.
பேருந்து முனைய போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:
வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் வார விடுமுறை என்பதால் அதிகமான பயணியர் வந்தனர்.
சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கப்பட்டனர். சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்வதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.