/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மனைவியை பிளேடால் கிழித்த கணவன் கைது
/
மனைவியை பிளேடால் கிழித்த கணவன் கைது
ADDED : ஜன 09, 2024 07:27 AM
மறைமலை நகர் : மறைமலை நகர் அடுத்த பொத்தேரியைச் சேர்ந்தவர் அபிஷேக், 25. இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த தமிழ்விழி, 23, என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தமிழ்விழி தன் தாயார் வீட்டில் தங்கி, மறைமலை நகர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 4ம் தேதி, தமிழ்விழி வேலைக்கு சென்ற போது, அவரை வழிமறித்த அபிஷேக், தன்னுடன் சேர்ந்து வாழும்படி, தமிழ்விழியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, திடீரென அபிஷேக் மறைத்து வைத்திருந்த பிளேடால், தமிழ்விழியின் கை, கால், தொடை உள்ளிட்ட பல இடங்களில் வெட்டி விட்டு தப்பிச்சென்றார். அக்கம்பக்கத்தினர் தமிழ்விழியை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மறைமலை நகர் போலீசார், அபிஷேக்கை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.